கொழும்பில் மனித புதைகுழி அகழ்வு! நிதியின்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்

Colombo Sri Lanka
By Parthiban Feb 07, 2025 08:30 PM GMT
Report

ஏழு மாதங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணி, அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்காமையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் நான்கு மாதங்களாக இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமையால் ஏற்கனவே தோண்டப்பட்ட மனித எலும்புகள் சேற்று நீரில் மூழ்கியுள்ளமையை மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆரம்பத்தை அவதானிப்பதற்காக அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியவந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்டு 2025 ஜனவரி 27 ஆம் திகதி மூன்றாவது முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆளும் அநுர கட்சிக்குள் குழப்ப நிலை! பதவி விலகும் நிலையில் எம்.பிக்கள்

ஆளும் அநுர கட்சிக்குள் குழப்ப நிலை! பதவி விலகும் நிலையில் எம்.பிக்கள்

அகழ்வு பணி

கொழும்பு துறைமுக மனித புதைகுழியை அண்டிய பகுதியில் ஏற்கனவே குறைந்தது மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

கொழும்பில் மனித புதைகுழி அகழ்வு! நிதியின்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல் | Excavation Of A Human Grave In Colombo

ஜனவரி 30ஆம் திகதி புதிதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் மண்ணின் மேற்பரப்பை அகற்றி கண்டுபிடிக்கப்பட்டதோடு ஜனவரி 31 வெள்ளிக்கிழமைக்குள் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

அகழ்வு பணிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு கிடைக்காவிடின் அடுத்த சில தினங்களில் குழியை மூட வேண்டிய நிலை கூட ஏற்படுமென, புதைகுழி தோண்டும் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர்களுள் ஒருவரான தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை! மறைமுகமாக சாடிய எம்.பி

அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை! மறைமுகமாக சாடிய எம்.பி

பாரிய மனித புதைகுழி

இவ்வாறு எங்களால் வேலை செய்ய முடியாதல்லவா?, இலங்கையில் பாரிய மனித புதைகுழிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

இதற்கு ஒரு கொள்கை வேண்டும். இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்காமல் விரைவாக அறிந்து தீர்வு காண வேண்டுமென நீதி அமைச்சின் பிரதானிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கொழும்பில் மனித புதைகுழி அகழ்வு! நிதியின்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல் | Excavation Of A Human Grave In Colombo

மேலும் அகழ்வு பணிகள் உரிய முறையில் தொடர அனுமதிக்கப்படாத காரணத்தினால் விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பொறுப்பான அதிகாரிகளின் அலட்சியத்தால் குழியை மூட நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மனித புதைகுழிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாததும் ஆய்வினை மேற்கொள்வதற்கு தடையாக உள்ளது.

புதைகுழி அமைந்துள்ள நிலத்தின் தன்மை மற்றும் புதைகுழியின் நெரிசலான நிலை காரணமாக ஏற்கனவே பல்வேறு கழிவுகள் மற்றும் கழிவுநீர் நிரம்பியுள்ளது.

அந்த நிலைமை நேரடியாக அகழ்வுப் பணிகளை பாதிக்கின்றது.

“பட்ஜெட் போட்டவுடனே ஓ.எம்.பி.யும், நீதியமைச்சரும் அதிகம் என சொல்கின்றனர். அகழ்வு பணிக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட தொகையில் பாதியையே கேட்கிறேன்.

குழி குப்பை வடிகாலில் தண்ணீரால் நிரம்பியுள்ளது. வீதியில் ஓடும் தண்ணீரும் இதில் விழுகிறது. இதை இப்படியே முன்னெடுத்தால் அகழ்வாராய்ச்சிக்கு என்ன நடக்கும் என்று இவர்களுக்குப் புரியவில்லையா?

முறிந்து போகும் அபாயத்தில் காசா போர் நிறுத்தம்!

முறிந்து போகும் அபாயத்தில் காசா போர் நிறுத்தம்!

மனித புதைகுழி

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மனித புதைகுழியை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கூடாரமொன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், 2025 ஜனவரி 30 வியாழன் முதல் அது முறையான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்” என்றார்.

ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக பாரிய மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் எட்டு நாட்களின் பின்னர் செப்டெம்பர் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

மேலும் நான்கு மண்டை ஓடுகள் குழியில் காணப்பட்டன.

செப்டெம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமானபோது, மாலையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளே அதிக மனித எலும்புகள் இருப்பதை அவதானித்தனர்.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US