சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் : பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2022 (2023) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 209761 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இம்முறை மாணவர்கள் 72.07 சதவீத சித்தியை பெற்றுள்ளதுடன், இவ்வருடம் 13588 மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளனர்.
இதன்படி, டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் எனவும் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் தொடர்பான சிக்கல்கள்
மேலும், பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1911 அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 0112784208/ 0112786616/ 0112784537/ 0112785922 பாடசாலை பரீட்சை மதிப்பீட்டு கிளை – 0112785231/ 0112785216/ 0112784037 தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
புலமைப்பரிசில் விண்ணப்பப்படிவம்
இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.
அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.