யாழில் வணிகத்துறையில் மாவட்ட நிலையில் 2வது இடத்தினை பெற்று மாணவி சாதனை
நேற்றைய தினம் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் வணிகத்துறையில் கல்வி பயின்ற மாணவி ராஜரூபன் ஜீவிதா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட நிலையில் 2வது இடத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் ,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி தனது அனுபவத்தினைப் பகிர்கையில்,
எனது கனவு சட்டக்கல்லூரிக்கு தெரிவாகி சட்டத்துறையில் சாதிப்பதே. அதற்கான அடிக்கல் தற்போது நாட்டப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
நான் பல இன்னல்களுக்கு மத்தியிலேயே கல்வியினைப் பயின்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். எனது குடும்ப கஷ்டத்தின் மத்தியிலும் நான் இந்த நிலைக்கு வருவதற்கு பலர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். அதில் குறிப்பாக நான் எனது பெற்றோர், அதிபர் ஆசிரியர்கள் ஆகியோரைக் கூறுவேன்.
என்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர்களை நான் என்றும் மறவாமல் நன்றிக்கடனுடன் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri