அமெரிக்காவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,744 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பிற நாடுகளை விட கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை மாத்திரம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 42 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1 கோடியே 97 லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, வியாழக்கிழமையன்று அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 3744 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களை விட 3725 கூடுதலாகும். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசி வழங்கும் பணிகளை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை ஒரு கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 50 டோஸ் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை வரையில் 27.94 லட்சம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.