வீடுகளை ஒப்படைக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் 5 முன்னாள் உறுப்பினர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வீடுகளை பொறுப்பெடுக்கும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 20 உறுப்பினர்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்க வீடுகள்
உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடுகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 40 புதிய உறுப்பினர்கள் வீடுகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
