கோட்டாபய வழங்கிய அமைச்சு பதவிகள் - முன்னாள் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது எழுந்த சர்ச்சையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இளைஞர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சமூகத்தின் பார்வையில் திறமையற்றவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும் அறியப்பட்டதாக பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அமைச்சரவையின் போது ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் பொதுமக்கள் தாங்கள் குற்றவாளிகள் என நினைப்பதாக சிலர் கூறுகின்றனர்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானம் இன்னமும் தாமதமாகி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
