முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையடித்து தப்பியோடியுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் அக்குரஸ்ஸ, மலிதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
விடுதியில் கொள்ளை
குறித்த நபரின் பழைய காதலியின் வேண்டுகோளுக்கமைய, அவரை சந்திப்பதற்காக பிலானே பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்குச் சென்று அறையொன்றில் தங்கியிருந்துள்ளார்.

முறைப்பாட்டாளர் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த இருவர், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பின்னர் அவர் அணிந்திருந்த 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகள் மற்றும் அவரிடமிருந்த 84,000 ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் முறைப்பாட்டாளரின் பழைய காதலிக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam