நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாகக் கைது
நிதி அமைச்சின் மு்ன்னாய் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் அடிப்படையில் சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் இந்த கைது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக
இந்த கைது, 2015ஆம் ஆண்டில் எந்தத் தேவையும் இல்லாமல் அரசு வர்த்தக நிறுவனமொன்றின் வழியாக ரூ. 9 கோடிக்கும் அதிகமான தொகையை செலவிட்டு, தற்காலிக நெல் சேமிப்பு களஞ்சியங்கள் 50 ஐ இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கொள்முதல் நடவடிக்கை உரிய நியமங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
சரித ரத்வத்தே தற்போது மேலதிக விசாரணைகளுக்காக அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்பப்டுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam