மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்
மட்டக்களப்பை நோக்கி முன்னாள் போராளிகள் படையெடுத்து வந்து கொண்டிருப்பதாக அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகள் மட்டக்களப்பிற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முன்னாள் போராளிகளை அணி திரட்டுகிறீர்களா ? என அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பகிரங்கமான அழைப்பு
தலைவர் கருணா அம்மானின் பணிப்பின் பேரில் என்னால் கடந்த மாதமளவில் முன்னாள் போராளிகளை ஒன்று திரளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் எங்களிடம் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் முதல் அங்கமாகவே முன்னாள் போராளிகளுக்கான ஒன்றுகூடல் ஒன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் இன்று (07.07.2024) நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
அத்தோடு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை செயலகத்தில் தலைவர் கருணா அம்மானும், ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணாவும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan