உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்
இலங்கையில் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் உட்பட 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்படட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவர்கள் இன்றைய தினம் தமது உறவினர்களை சந்தித்தது போன்று, நீண்ட காலமாக சிறையில் உள்ள ஏனையவர்களையும் விடுவித்து, அவர்களின் குடும்பத்துடன் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam