உடல் முழுதும் காயங்களுடன் அன்றாட வாழ்வை பெரும் துயருக்கு மத்தியில் கடக்கும் முன்னாள் போராளி
உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.
இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் பரசன்குளம், புளியங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி சுப்பிரமணியம் நாகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் இணைந்து தனது அன்றாட வாழ்க்கையை பல இன்னல்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மனதளவிலும், உடல் அளவிலும் மீண்டெழ முடியாத சில வடுக்களுடன் தனது வாழ் நாளை கழிப்பதற்காக தினந்தோறும் போராட்டக்களத்தில் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600



