எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க திட்டமிட்டது தொடர்பில் ஆதாரமில்லை! - உதய கம்மன்பில
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளரைத் தாம் சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கான விஜயத்தின் போது அவருடன் ஒரு சந்திப்பைக் கூட எதிர்பார்க்கவில்லை என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் குதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதாக வெளியான தகவல்களில் எந்த அடிப்படையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், திருகோணமலையில் உள்ள 100 எரிபொருள் குதங்களும், ஒரு உடன்படிக்கையின் கீழ் ஏற்கனவே 2003 ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையிலான கடிதத்தின்படி, திருகோணமலை எரிபொருள் குதங்களை இந்தியாவால் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
