அநுரவின் அதிரடி முடிவால் அனைவரும் பதற்றத்தில்! இனி அடுத்தடுத்து தொடரப்போகும் கைதுகள்
நாடாளுமன்ற உறுப்பினர்களே பலர் சிறையில் இருக்கும் போது மாநகர சபை உறுப்பினர் ஊழல் செய்திருந்தால் தக்க நடவடிக்கை உண்டு என்று கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர் பழ.புஸ்பநாதன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பாக இருந்திருந்தால் 80 வாக்குகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றிருக்கும்.
இந்த 70 ஆண்டுகால ஆட்சியில் ஆளும் தரப்பு தான் மாற்றம் பெற்றதே தவிர மோசடிகள் மாற்றம் பெறவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி நேர்மையான அரசியலை நடாத்த வேண்டும் என்று நினைக்கின்றார்.
எல்லோருக்கும் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றார் என்று குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க.