வெளிநாட்டு கடன்களை நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையானது ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் வாங்குவதை நிறுத்தக்கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickrenesinghe) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கை வெளிநாட்டுக் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டிய தருணம் இது, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதையும் நிறுத்த வேண்டும்.
73ஆவது ஆண்டு நிறைவு
இலங்கை தனது தேசத்தை பராமரிப்பதற்காக தனது சொந்த பணத்தை சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
1951ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்கட்சியின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் (02) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
