குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்

Sri Lanka Army Sri Lanka Police Jaffna Deshabandu Tennakoon
By Theepan Mar 17, 2024 11:17 PM GMT
Report

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று(17) நடைபெற்ற போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார்.

பொலிஸ் புலனாய்வாளர்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 255 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சமுதாய பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள வாக்காளர் பதிவேட்டில் உள்ள பெயர்களுக்கு மேலதிகமாக யார் யார் கிராமத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர், போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புபட்டவர், தேடப்படும் குற்றவாளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் கிராமங்களில் பதுங்கி இருக்கலாம்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Event Attended By Deshabandu Tennakon In Jaffna

அவ்வாறானவர்களை பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கண்டுபிடிப்பது சிரமம். ஆகவே அதன்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் பொலிஸாருக்கு உதவவேண்டும்.

30 வருட யுத்தம் காரணமாகவும் ஈஸ்டர் தாக்குதல் காரணமாகவும் பல்வேறு நெருக்கடி ஏற்பட்டது. அவ்வாறான ஒரு விடயத்தை இனிமேல் ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.

தொலைபேசி அழைப்பு சேவை

தென்மாகாணத்தில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அவ்வாறான ஒன்றை வடக்கிலும் அனுமதிக்க முடியாது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் இவற்றை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

யுக்திய நடவடிக்கை மூலம் போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் பலரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Event Attended By Deshabandu Tennakon In Jaffna

இதற்கு வடக்கில் உள்ளவர்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 119 அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பு சேவையில் மொழி ரீதியான சிக்கல்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டனர்.

அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டலுக்கமைய 107 என்கிற தமிழ் மொழில மூல அவசர பொலிஸ் தொலைபேசி அழைப்பு சேவை வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Event Attended By Deshabandu Tennakon In Jaffna

குறித்த 107 என்ற இலக்கத்திற்கு நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொலிஸாரால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சினைவுச் சின்னமாக வாள் வழங்கி வைக்கப்பட்டது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன் | Event Attended By Deshabandu Tennakon In Jaffna

குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மத குருமார்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சமுக பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்கை வெளியேற்ற இரகசியத் திட்டம்

ரிஷி சுனக்கை வெளியேற்ற இரகசியத் திட்டம்

யாழில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US