ரஷ்யாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட மற்றுமொரு வெடிகுண்டு! 3,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ரஷ்யாவின் பெல்கொரோட் நகரில் வெடிக்காத வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 3,000க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் நேற்று முன்தினம் மாலை தவறுதலாக குண்டு வீசி இருந்தது.
அவசர நிலை பிரகடனம்
இதன்போது, சாலையில் விழுந்த குண்டு, பயங்கர சத்தத்துடன்வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் 4 கார்கள் முற்றிலும் சேதமடைந்ததுடன் பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
3,000 குடியிருப்பாளர்கள் பாதிப்பு
இந்நிலையில் இன்று (22.04.2023) கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு அதே விமானத்தில் இருந்து வந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
வெடிக்காத குண்டு கண்டுப்பிக்கப்பட்ட நிலையில், 17 அடுக்குமாடி கட்டிடங்கள் "200 மீட்டர் சுற்றளவில்" சுற்றி வளைக்கப்பட வேண்டும் என்று உறுதிப்படுத்தினார். இதனால் 3,000 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.