இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொண்டுள்ள விசேட செயற்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் இத்தாலி, ஜேர்மன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். சுற்றுலா துறையினால் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வருமானத்தை நாங்கள் இழந்துள்ளோம்.
அத்துடன் சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்டிய 3 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை மிகப்பெரிய பிரச்சினையாகும்.
உக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வந்த திட்டத்திற்கமைய எதிர்வரும் நாட்களில் ஏனைய நாட்டவர்களையும் அழைத்து வர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




