தமிழர் பகுதியிலுள்ள முக்கிய பாலம் குறித்து சர்வதேச அதிகாரிகளின் ஆய்வு நடவடிக்கை
இலங்கையில் நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு - கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்தத்தினால் சேதமடைந்துள்ள பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்காக நப்லஸ் பல்கழைக்க பேராசிரியர் லூயி டி சார் நோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய தொழில் நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுப்பாய்வு நடவடிக்கை
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தொழில் நுட்ப நிபுணர்கள் கொண்ட குழுவினர் மட்டக்களப்பு கல்லடி பிரதான இரண்டு பாலத்தின் தரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதன் போது நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் மூலம் பகுப்பாய்வு செய்து பாலத்தின் தரம் தொடர்பாக தரவுகளை பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ ஜீ ஒ ரீ அநோ , பௌலோ புற்றி நோ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஏ.எம். சி.ரி அத்தநாயக்க, பிரதம பொறியியலாளர் எஸ். கலாதரன், கிழக்கு மாகாண பாலங்கள் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறியியலாளர் எம்.ஏ.வாதுலன், கிழக்கு மாகாண பாலங்கள் வடிவமைப்பு பொறியியலாளர் கே.வில்வராசன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலங்கள் பராமரிப்பு நிர்வாக பொறியியலாளர் ரீ.ராமச்சந்திரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர் எம்.சுரேஸ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri