எமது வர்த்தக அடையாளத்தை பாதுகாக்க ஒத்துழையுங்கள்! ஐரோப்பிய நாடுகளிடம் வடக்கு ஆளுநர் வேண்டுகோள்

Northern Province of Sri Lanka World
By Rakesh Feb 25, 2026 12:20 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியூமன் ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இச்சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

சுரேஷ் சாலேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஹ்ரான்! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள்

சுரேஷ் சாலேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஹ்ரான்! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள்

முக்கிய கலந்துரையாடல் 

இதன்போது, இலங்கைக்கும் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இரு நாட்டுத் தூதுவர்களும் ஆளுநருடன் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.

எமது வர்த்தக அடையாளத்தை பாதுகாக்க ஒத்துழையுங்கள்! ஐரோப்பிய நாடுகளிடம் வடக்கு ஆளுநர் வேண்டுகோள் | European Officials Met Vedanayagan

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தென்னிலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாவிகளை எவ்வாறு வடக்கு நோக்கி ஈர்ப்பது என்பது தொடர்பில் தூதுவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் விரிவான விளக்கமளித்தார்.

வடக்கு மற்றும் தெற்குக்கு இடையிலான பயண நேரம் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய தூதுவர்கள், பயண நேரத்தைக் குறைப்பதன் மூலமே சுற்றுலாவிகளை வடக்குக்கு அதிகளவில் ஈர்க்க முடியும் எனக் குறிப்பிட்டதோடு, அதற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏதும் உள்ளனவா எனவும் வினவினர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், போக்குவரத்து உட்கட்டமைப்பு மேம்பாடுகள், உள்ளூர் விமான சேவைகள் மற்றும் மாகாணத்தின் எதிர்காலச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

மேலும், வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகின்றது என்பது குறித்தும், மாகாண சபைத் தேர்தல்கள் குறித்தும் தூதுவர்கள் கேட்டறிந்தனர்.

பல தகவல்கள் வெளியாகும் - சுரேஸ் சாலே கைது தொடர்பில் சற்றுமுன் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்

பல தகவல்கள் வெளியாகும் - சுரேஸ் சாலே கைது தொடர்பில் சற்றுமுன் பொலிஸ் தரப்பிலிருந்து வெளியான தகவல்

பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்

பிள்ளையான் - சுரேஸ் சாலேவிற்கு வைக்கப்பட்ட இலக்கு! கைதின் பின்னணியில் உள்ள சதி.. கம்மன்பில பகிரங்க தகவல்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US