ஐரோப்பா செல்ல காத்திருந்த இலங்கையர்களுக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி
ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் கைது
எத்துகால பகுதியில் வைத்து நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
46 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு
ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக 7 பேரிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு நபரிடமும் 50 முதல் 70 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நாட்டின் பல பகுதிகளிலும் வாடகைக்கு எடுத்த வீடுகளிலிருந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan