இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடரவேண்டும்! சஜித் கோரிக்கை
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகையைத் தொடரவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினருடனான சந்திப்பின் போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். இதன்போது இலங்கையில் மனித உரிமைகள் விடயங்கள் மோசமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தகச் சலுகையைத் தொடருமாறு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் ஜி.எஸ்.பி பிளஸ் நிலையை மறுபரிசீலனை செய்யும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.