இலங்கையின் முடிவு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி
கடந்த கால மோதலின் விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒப்புதல்களை உறுதி செய்வதற்கும், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை வளர்ப்பதற்கும், இலங்கை உடன்படாமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தின் திறமையான பணியை உறுதிப்படுத்துவது உட்பட, ஒரு நிலையான நல்லிணக்க செயல்முறையைப் பராமரிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின், நோக்கங்களை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அது தொடர்பான அர்ப்பணிப்புகளை செயல்படுத்த, இலங்கை அரசாங்கத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் தரத்திற்கு இணங்க, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக சுலோவேனியாவின் பிரதிநிதி அனிதா பிபன் நேற்றைய அமர்வில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு வெளியானது
ஐ.நாவை இனியும் ஏமாற்ற முடியாது! - இலங்கை அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் செயற்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்
இலங்கை மனித உரிமைகள் விவகாரம்! ஜப்பான் அரசின் நிலைப்பாடு
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam