இலங்கையில் சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகத்தை நிறுவ நடவடிக்கை
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகத்தை நிறுவ, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த அலுவலகத்தை உருவாக்கும் விடயங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள, நிபுணர் குழு நியமிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில், சட்டமா அதிபர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட இரண்டு பிரதிநிதிகள், நீதி அமைச்சின் செயலாளர், நீதித்துறை சேவையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மூத்த நீதிபதி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட பிரதிநிதி உள்ளிட்ட முக்கியமானவர்கள் அங்கத்துவம் வகிப்பார்கள்.
ஆரம்ப திட்டங்கள்
இந்தக் குழுவின் முதன்மைப் பொறுப்பு, சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகத்தை நிறுவுவதற்கான ஆரம்ப திட்டங்களை உருவாக்குவதாகும்.
இந்தநிலையில், அலுவலத்துக்கான வரைவு கருத்துரு தயாரிக்கப்பட்டதும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |