இலங்கையில் முழுமையாக நீக்கப்படும் தடை! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் வைத்து உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி மீதான தடை
எனினும் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படுமா என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது வரையில் வெளியான தகவல்களின் படி தற்போதைய சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கான தடையை நீக்குவது என்பது மிகவும் அவதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம் என்றே பல தரப்பினரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |