அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம்! வாடிக்கையாளர்களுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை
விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் நேற்றைய தினம் (22.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்
மேலும் தெரிவிக்கையில், விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வேலைத்திட்டத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெறும் சலுகைகள் போதியளவில் இல்லை.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இதன்காரணமாக வாடிக்கையாளர்களை கருத்திற் கொண்டு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியநிலை ஏற்படும்.
உணவுப் பொருட்கள் இறக்குமதி
அதேநேரம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து செயற்பட வேண்டும்.

பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam