கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 232 பேரை பாதுகாப்பு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று(29) பிற்பகல் வெளியிட்டு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
மோதல்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு(28) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன்,அங்கிருந்து 600க்கும் மேற்பட்ட கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியிருந்தனர்.
அறிக்கை
சம்பவம் இடம்பெற்றபோது, நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 998 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்று கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடும் மோதல்! ஒருவர் பலி : 600 இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம் |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
