அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது.
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன், 68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதல்..
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில் இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.
இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
YOU MAY LIKE THID VIDEO
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 13 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam