மனைவியை தகாத முறைக்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை
ஜெர்மனியில் மிக நீண்ட காலமாக மனைவியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் ஓருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியை மயக்கமருந்து கொடுத்து மயக்க நிலையில் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்த 61 வயது ஆணுக்கு ஜெர்மனி நீதிமன்றம் 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பள்ளி பராமரிப்பாளராக பணியாற்றிய ஃபெர்னாண்டோ பி. (Fernando P.) என அடையாளப்படுத்தப்படும் இந்த ஆண், தனது வீட்டில் மனைவியை தாக்குதல் செய்து, காணொளி எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமல் இணையத்தில் பகிர்ந்த குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்பட்டார்.

மேற்கு ஜெர்மனியின் ஆச்சென் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
கடுமையான பாலியல் குற்றச் சயல்கள், ஊடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி தனது வீட்டில் மீண்டும் மீண்டும் ரகசியமாக மயக்கமருந்து கொடுத்து மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் எனவும் அவர் இந்த செயல்களை காணொளியாக பதிவு செய்து, இணைய தளங்களில் மற்ற பயனர்களுக்கு கிடைக்கச் செய்தார் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் சுமார் 15 ஆண்டுகளாக நீடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2018 முதல் 2024 வரையிலான குற்றங்களுக்கு அவர் குற்றவாளியாக்கப்பட்டார். சில குற்றச்சாட்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.