ரணில் மற்றும் ஸ்டாலின் ஊடாக மிகப்பெரும் வியூகம் அமைக்கும் எரிக் சொல்ஹெய்ம் (VIDEO)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆதரவாக செய்படுவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
அவர் விடுதலை புலிகளின் காலத்தில் முக்கியமாக செயற்பட்ட நபர் என்பதுடன் இலங்கைக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்குமிடையில் சமாதான தூதுவராக செயற்பட்டவராவார்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசகராக செயற்படும் நிலையில் அவரின் செயற்பாடுகளை இந்தியா ஒருபோதும் கவனத்திற்கொண்டு எவ்வித நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,