பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆளுநர் வழங்கிய தகவல்!
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (11.06.2025) நடைபெற்றது.
இதன்போது கருத்துரைத்த ஆளுநர், "அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்ற போதும் அலுவலகத்திலிருந்தே திட்டங்களை தயாரிக்கின்றனர்.
அதேபோல ஒரு விடயத்தைக் குறிப்பிட்டால் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனிக்கின்ற தன்மையும் இல்லை.

செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை
மக்களுக்கான அபிவிருத்தி
அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கு சாதகமான சூழல் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் பார்த்தீனியம் செடி காணப்படுகின்றது. பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் விரைவாக அதைச் செயற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிரதம செயலாளர், இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டதுடன் அதற்கு அமைவாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய 12 திணைக்களங்களையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.














அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
