திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்(Photos)

Trincomalee Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Badurdeen Siyana Sep 24, 2022 12:19 AM GMT
Report

மாவட்டத்திலிருக்கக்கூடிய எந்தவொரு குடிமகனும் உணவில்லாமல் அதேபோன்று எந்தவொரு பிள்ளையும் போஷாக்கின்மையால் வாடக்கூடிய ஒரு நிலவரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எச்.என் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடைய வழிகாட்டலின் கீழ் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மை ஒழித்தல் தொடர்பான 07 குழுக்கள் தேசிய ரீதியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்(Photos) | Eradicate Food Security Malnutrition Trincomalee

இதனடிப்படையில் உணவுப் போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த குழு நேற்று முன்தினம்(22.09.2022) திருகோணமலை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின் அவசியம்

திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்(Photos) | Eradicate Food Security Malnutrition Trincomalee

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“கிராமிய ரீதியாக உருவாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான குழு கிராமத்திலே உணவின்றி இருப்பவர்களது தகவல்கள் மற்றும் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது தகவல்களை கிரமமான முறையில் சேகரித்து அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறானவர்கள் அற்ற ஒரு பிரதேசதத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அக் குழுக்களையே சாரும்.

எனவே அதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கவேண்டிய தேவை அந்தக் குழுக்களுக்கு காணப்படுகின்றது.

எதிர்வருகின்ற வாரத்தில் மாவட்டத்தில் போஷக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சிறுவர்கள் மற்றும் உணவின்றி தவிக்கக் கூடிய குடும்பங்களுடைய விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

தகவல்கள் சேகரிப்பு

திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்(Photos) | Eradicate Food Security Malnutrition Trincomalee

இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு உரிய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் உரிய செயற்பாடுகளை கிராமிய மற்றும் பிரதேச செயலக குழுக்களும் ஏனைய பங்குதாரர்களை இணைத்து செயற்படல் வேண்டும்.

இதனடிப்படையில் அரச நிறுவனங்கள், தொடர்புப்பட்ட ஏனைய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என்பன இணைந்து இந்தப் பொறிமுறையை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.

திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்(Photos) | Eradicate Food Security Malnutrition Trincomalee

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US