EPFஇன் வருடாந்த வட்டி! ரணிலின் யோசனைக்கு கிடைத்தது அனுமதி
அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் 9 சதவீதம் வருடாந்த வட்டி விகிதத்தை பராமரிக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் யோசனை

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (07.08.2023) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் EPF உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த வட்டி பலன் சதவீதங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam