EPF தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் இரண்டாவது தவணை நிதியை பெற்றுக்கொள்ள தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். இதனால் சாதாரண வைப்பாளர்கள்,முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் அறிவிப்பு
கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
EPF-ETF தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல் |
வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்! நாடாளுமன்றில் கடுமையான எச்சரிக்கை |
வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படுமென எச்சரிக்கை! உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வலியுறுத்தல் |