வாழ்வாதாரத்திற்காக முழு குடும்பமே இணைந்து பாடுபடும் நிலை (Video)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல.
வேலை இழந்தவர்கள், சம்பளத்தை இழந்தவர்கள் என பலரும் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருப்பததை நாம் சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இந்த சூழலில் கைத்தொழில் மற்றும் சிறு சிறு வியாபாரங்களுக்குள் பலர் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் தொழிலுக்காக பாடுபடும் குடும்பத்தின் நிலையையே இன்று வெளிக்கொண்டு வருகிறது லங்காசிறியின் கதைகேளு நிகழ்ச்சி.
வெப்பமான காலநிலைக்கு இதமாகவும், வயிற்றுப்புண் உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணமளிக்கும் விதமாகவும் கற்றாளை மற்றும் பழங்கள் என்பவற்றில் குளிர்பானம் தயாரிக்கும் தொழிலை கையில் எடுத்துள்ளது இந்த குடும்பம்.
முழு குடும்பமுமே வீதிக்கு இறங்கி இந்த தொழிலை மும்முரமாகவும், சிறப்புடனும் செய்து வருகிறது. இந்த நிலையில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், எதிர்நோக்கிய கஷ்டங்கள் என்பவற்றை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான விரிவான தொகுப்பாக வருகிறது கதைகேளு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
