முழு நாடே ஒன்றாக புலோலியில் கருத்தரங்கு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் “முழு நாடே ஒன்றாக செயற்திட்ட அடிப்படையிலான போதை மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு புலோலி, கிழக்கு கிராமத்தில் பொலிஸ் பாதுகாப்புக் குழு (Police Security Committee) தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று(11.07.2026) பிற்பகல் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் பருத்தித்துறை போலிஸ் நிலைய குற்ற பிரிவு பொறுப்பதிகாரி MO விஜயரத்தின, பொலிஸ் உத்தியோகத்தர் லங்கா ஆகியோர் கலந்துகொண்டு போதை விழிப்புணர்வு, மற்றும் குற்ற செயல்கள் தடுப்பு தொடர்பான கருந்துரைகளை வழங்கியுள்ளனர்.
முழு நாடே ஒன்றாக செயற்றிட்டம்
அங்கு கருத்து தெரிவித்த போலிஸ் அதிகாரிகள்,
ஒரு கிராமம், குடியிருப்புப் பகுதி அல்லது சமூகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பொலிஸாரும், மக்களும் இணைந்து செயல்படும் ஒரு குழுவே இதுவாகும்.

மேலும், குற்றச் செயல்களைத் தடுப்பது, சமூகத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போதைப்பொருள், திருட்டு, வன்முறை போன்ற பிரச்சினைகளைக் குறைப்பது போன்ற விடயங்களுக்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் 6ஆம் வட்டார பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.