யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவதை உறுதி செய்வதுடன் அதில் மாணவர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர்களுடன் நேற்று(20.07.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை
அவர் மேலும் தெரிவிக்கையில், "வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 9 வரையுள்ள மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படக்கூடாது.
அதேபோன்று இணையம் ஊடான வகுப்புக்கள், பிரத்தியேக வகுப்புக்கள் என்பனவும் நடைபெறக்கூடாது. அதை பிரதேச செயலர்கள் கண்காணிக்க வேண்டும்.
அறநெறி வகுப்புக்கள் கிராமங்களில் நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டும்.
இதுவரை அறநெறி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்காவிட்டால் அதனை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
ஆலயங்களில் நடைபெறும் கலை நிகழ்வுகளில் மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதுடன் அவர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவும் வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




