அதிகார பலத்தினால் தலைவீங்கி செயற்பட்டால் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும்!பிரேம்நாத் சீ தொலவத்த எச்சரிக்கை
அதிகார பலத்தினால் தலைவீங்கி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முயற்சித்தால், அதன் பிரதிபலன்களை தற்போதைய அரசாங்கம் அனுபவிக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்யப்போவதில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம்.
எமக்கு அப்படிச் செய்ய உரிமையில்லை. இதனால், இந்த விடயம் சம்பந்தமாக மக்களுக்குச் செவிகொடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என அரசாங்க தரப்பினர் கூறுகின்றனரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,
அவர்கள் கூறுவார்கள். கொடுப்போம் என்றும் கூறுவார்கள். எனினும் அவற்றின் பிரதிபலன்களை நாம் அனுபவிக்க நேரிடும்.
மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதே இதற்குக் காரணம். மகிந்த ராஜபக்ச போரை வென்ற மிகப் பெரிய தலைவர். அவரையே மக்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடித்தனர்.
இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் செல்லவில்லை நல்லாட்சி அரசாங்கத்தைத் தோற்கடித்தனர்.
அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்முடன் இருக்கவில்லை.இதனால், அவர்கள் அதிகாரத்தால் தலைவீங்கி செயற்பட்டனர். அதிகார பலத்தால் தலைவீங்கி வேலைகளைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
