நியூசிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இமிகிரேஷன் நியூசிலாந்து(INZ), விசா விண்ணப்பதாரர்களிடம் ஆங்கில மொழியில் இல்லாத விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கு சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய விதியானது எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, பிற மொழிகளில் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பெரும்பாலும் செயலாக்கத்திற்கு அதிக தாமதமாகும்.
சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு
இருப்பினும், சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகளை கொண்ட ஆவணங்களை வழங்குவதன் மூலம், விசா விண்ணப்ப செயல்முறை திறனை மேம்படுத்த முடியும் என இம்மிகிரேஷன் நியூசிலாந்து (INZ) தெரிவித்துள்ளது.
அந்த வகையில், பின்வரும் ஆவணங்களுக்கே சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு கோரப்பட்டுள்ளது.
1.பிறப்புச் சான்றிதழ்(Birth certificate)
2.திருமண சான்றிதழ்(Marriage certificate)
3.வங்கி கணக்கு அறிக்கைகள்(Bank account statements)
4.கல்விச் சான்றுகள்(Educational credentials)
5.பொலிஸ் நிலைய சான்றிதழ்கள்(Police Station Certificates), என்பனவாகும்.
மேலும், இம்மிகிரேஷன் நியூசிலாந்து (INZ) மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்காது என்பதுடன் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது நம்பகமான மொழிபெயர்ப்பு நிறுவனம் மூலம் மொழிபெயர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |