இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் அணி - போட்டி அட்டவணை வெளியானது..!
இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து 3 இருபதுக்கு இருபது(T20I) மற்றும் 3 ஒருநாள் (ODI) சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகள், கண்டி - பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் இலங்கையில்..
இதற்கமைய, முதலாவது போட்டி- பெப்ரவரி 01, இரண்டாவது போட்டி - பெப்ரவரி 03, மற்றுமு் மூன்றாவது போட்டி - பெப்ரவரி 05 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

பெப்ரவரி மாதம் நடைபெறும் டி20 தொடரைத் தொடர்ந்து, ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் (ICC Women's Champions Trophy 2027) தொடருக்குப் பின்னர் இங்கிலாந்து அணி மீண்டும் மார்ச் மாதம் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.
ஒருநாள் தொடர் தம்புள்ளை ரன்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் நடைபெறும் நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி - மார்ச் 04, இரண்டாவது ஒருநாள் போட்டி- மார்ச் 06 மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி - மார்ச் 08ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்