யூரோ கிண்ண கால்பந்து தொடர்! - வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் வரலாற்று வெற்றியுடன் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் 39 மற்றும் 104வது நிமிடங்களில் கோல்கள் போடப்பட்டன. டென்மார்க் அணி 30வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு.....
16வது ஐரோப்பிய கால் பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
வெம்ப்லி அரங்கில் இடம்பெறும் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதுகின்றன. போட்டியின் 30 நிமிடத்தில் டென்மார்க் அணி தனது முதல் கோலினை பதிவுசெய்துள்ளது.
தற்போது 1 க்கு 0 என்ற அடிப்படையில் டென்மார்க் அணி முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யூரோ கிண்ண கால்பந்து தொடர் - நேரலை
முன்னதாக இன்று காலை இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்டநேர முடிவில், இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், வழங்கப்பட்ட மேலதிக நேரத்திலும், இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து, இடம்பெற்ற பெனால்டி முறைமையில், 4 க்கு 2 என்ற கோல்கணக்கில், ஸ்பெய்னை வீழ்த்தி, இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.