இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு போட்டித்தடை
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு(Brydon carse) மூன்று மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் விதிமுறைகளை மீறியதால் காரணமாக அவருக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த பிரைடன் கார்ஸ் இங்கிலாந்தின் கழகமட்ட அணிகளுக்காக விளையாடி தற்போது இங்கிலாந்தின் தேசிய அணிக்காக விளையாடி வருகின்றார்.
குற்றச்சாட்டுக்கள்
இங்கிலாந்து அணி சார்பாக 14 ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட அவர், ரசிகர்களின் ஆதரவிற்க்காக போட்டித்தடை காலத்தின் பின்னர் சிறப்பாக செயற்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
“எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கிலாந்து தேசிய அணியில் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்
எனக்கு ஆதரவளித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியதிற்கு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அடுத்த 12 வாரங்களில் நான் மீண்டும் விளையாடத் தொடங்கும் போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவிற்கு ஏற்றல் போல் சிறப்பான விளையாட்டை பரிசளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐசிசி போட்டிவிதிகளை மீறிய 13 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |