சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

Sachin Tendulkar Cricket Joe Root England
By Sivaa Mayuri Dec 01, 2024 08:50 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிய சாதனை ஒன்றை ஏற்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 23 ஓட்டங்களை எடுத்திருந்த போது, இந்த சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார்.

இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அதிக ஓட்டங்களை சேர்த்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

நுவரெலியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி

டெஸ்ட் போட்டிகள் 

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸ்களில் மட்டும் 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார். சச்சின் டெண்டுல்கர் 60 இன்னிங்ஸ்களிலேயே 1625 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் | England Player Breaks Sachin S Rare Record

எனினும், அந்த சாதனையை முறியடித்திருக்கும் ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் 1630 ஓட்டங்களை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளின் கடைசி இன்னிங்ஸில் ஓட்டங்களை சேர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.

அதன்போது, ஆடுகளம் சேதம் அடைந்து இருக்கும் என்பதால் துடுப்பாட்டம் செய்வது கடினமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் ஜோ ரூட் செய்துள்ள இந்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக மாறி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் | England Player Breaks Sachin S Rare Record

மேலும், தனது 150 வது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். இந்தநிலையில், ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ஓட்டச் சாதனையை நெருங்கி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் 15,921 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், ஜோ ரூட் 12,777 ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளார். எனவே, ஜோ ரூட் இன்னும் 3144 ஓட்டங்களை பெற்றால், சச்சினின் சாதனையை சமன் செய்ய முடியும்.    

பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

நேபாளத்தை வீழ்த்திய பங்களாதேஸ் அணி

நேபாளத்தை வீழ்த்திய பங்களாதேஸ் அணி

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US