இங்கிலாந்தில் கொடூரம் : நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மைல்ஸ் கிராஸ் என்பவர், தற்கொலைக்கு உதவும் ரசாயனங்களை ஒன்லைன் வழியாக விற்ற குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தற்கொலை தொடர்பான இணையதளப் பக்கத்தில் சந்தித்த நான்கு பேருக்கு தலா 100 பவுண்டுகள் கட்டணத்தில் இவர் ஆபத்தான ரசாயனப் பொதிகளை அனுப்பியுள்ளார்.
இதில் 29 வயதான சுப்ரீத் சிங் உள்ளிட்ட இருவர் அந்த ரசாயனத்தைப் பயன்படுத்தி உயிரிழந்துள்ளனர்.
ஆபத்தான இணையதளப் பக்கங்களை
2025 ஜனவரியில் இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் கூடுதல் ரசாயனங்கள் மற்றும் அவற்றை பேக் செய்யப் பயன்படுத்தப்படும் பைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தனிப்பட்ட லாபத்திற்காக மன உளைச்சலில் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய நபர்களைக் குறிவைத்து கிராஸ் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ரசாயனத்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த கால அட்டவணையையும் அவர் வழங்கியுள்ளார்.
இந்த வழக்கைத் தொடர்ந்து, இது போன்ற ஆபத்தான இணையதளப் பக்கங்களை முடக்கும் பணியில் பொலிஸாரும் 'Ofcom' அமைப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பிரித்தானிய சட்ட வரலாற்றில் இணையதளம் வழியாக தற்கொலைக்குத் தூண்டியதற்காக வழங்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam