இங்கிலாந்தில் துணை பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியான தண்டனை? விசாரணையில் மருத்துவ நிபுணர்!
இங்கிலாந்தில் தமது துணை மருத்துவரான பெண்ணுக்கு தண்டனை வழங்கும் வகையில் ஆடைகளின்றி நிற்குமாறு கூறியதாக கூறப்படும் மருத்துவர் ஒருவரின் வாதங்களை ஏற்க அந்த நாட்டின் தொழில் தீர்ப்பாயம் மறுத்துள்ளது.
அத்துடன் இந்த மருத்துவர், மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தமையையும் தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
எட்வின் சந்திரஹரன் என்ற மூத்த மருத்துவ நிபுணர், தமது துணை மருத்துவரான பெண், தம்மிடம் ஒருவரின் உயிரை பறிக்கக்கூடிய பிழையான கேள்வி ஒன்றை கேட்டார் என்பதற்காக இந்த தண்டனைக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தம்மீதான குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர் மறுத்துள்ளார்.

இனப்புறக்கணிப்பு காரணமாக ஏனைய மருத்துவர்கள் தம்மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக அந்த மருத்துவ நிபுணர் தீர்ப்பாயத்தின் முன் தெரிவித்துள்ளார்.
எனினும் தீர்ப்பாயம் அதனையும் நிராகரித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் 2020 ஆம் ஆண்டு மருத்துவ நிபுணர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னரே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு