இங்கிலாந்தின் லிவர்பூல் குண்டுதாாியை, நாடு கடத்தாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூலில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டு மரணமானவரான, எமட் அல் ஸ்வீல்மீன் (Emad Al Swealmeen) 2014ஆம் ஆண்டு புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர் என்பது தொியவந்துள்ளது.
அத்துடன் அவர் நாட்டில் தங்குவதற்கு மேல்முறையீடு செய்ய நீதிபதிகளால் அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவரை ஏன் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சு நாடு கடத்தவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புகலிடக்கோாிக்கை நிராகாிக்கப்பட்டதும், அவர் இங்கிலாந்தில் தங்குவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.
எனினும் அது தொடா்பான மனு, நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை நாடு கடத்த இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் முயன்றதா? என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புகலிடம் தேடும் ஒருவரின் கோாிக்கை நிராகாிக்கப்பட்டு, அவர் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை இழந்தால், நாட்டின் உள்துறை அலுவலகம், அவரின் நிதி உதவி மற்றும் வீட்டு வசதியைத் திரும்பப் பெறுகிறது.
அத்துடன் அவர் இங்கிலாந்தில் இருந்து அகற்றப்படுவார் என்ற எச்சாிக்கையும் விடுக்கப்படவேண்டும்.
எனினும் குண்டுதாாியான, இமாட் அல் ஸ்வீல்மீனுக்கு (Emad Al Swealmeen) இங்கிலாந்தின் உள்துறை அமைச்சு இந்த எச்சாிக்கையை விடுத்ததா? என்பது இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.







