மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் இயந்திர கோளாறு (Photo)
மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் நேற்று ஏற்பட்ட இயந்திர கோளாரினால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதையடுத்து நேற்று மாலையே பொறியியலாளர்களால் புகையிரதம் சரிசெய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா - ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் வவுனியா -ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொறியியலாளர்கள் புகையிரத்தை சரிசெய்துள்ள நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மதவாச்சியில் இருந்து மன்னார் சென்ற புகையிரதத்தில் நேற்று இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மதவாச்சி பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டமையால் வவுனியா -ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்து நின்றுள்ளது.
நீண்ட நேரமாகியும் புகையிரத கோளாறு சீர்செய்யப்படாமையினால் அதில் பயணித்த பொதுமக்கள் பேருந்துகளில் ஏறி தமது பயணத்தினை தொடர்ந்திருந்தனர்.


2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam