நாடு பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில்
நாடு பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் நீர் மின் உற்பத்திக்கு போதியளவு நீா் இன்மை போன்ற ஏதுக்களினால் எதிர்காலத்தில் பாரியளவில் எரிசக்தி நெருக்கடி நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மக்களின் வாழ்க்கை பெரும் சாவல்களுக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் புறச் சக்திகள் தலையீடு செய்து அரசியல் மாற்றங்களை செய்ய முயற்சிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்களை தொடர்ந்தும் பாதுகாக்க முடியாது என தென்பட்டால் அந்த சக்திகள் மாற்று வழிகளை தெரிவு செய்வதற்கு நாட்டம் காட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் வாரிசு அல்லது மருமகனாக இதுவரை காலமும் ரணில் விக்ரமசிங்க கருதப்பட்ட போதிலும் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் அநுரகுமார திஸாநாயக்க என தாம் கருதுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri