கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்! தூக்கிச்சென்று எல்லையில் விட்ட இங்கிலாந்து வீரர் (Video)
இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்குமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேரிவு செய்தார். அதன்படி, அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டம் செய்து வருகிறது.
புதைவடிவ எரிபொருட்களுக்கு எதிர்ப்பு
போட்டி தொடங்கி சில நிமிடங்களில், Just Stop Oil என்னும் சமூக ஆர்வல அமைப்பைச் சேர்ந்த இருவர், நிற பொடியை தூவியவாறு மைதானத்திற்குள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது, அவர்களை பொலிஸாசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அந்த சமயம் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் பேர்ஸ்டோவ், போராட்டக்காரர்களில் ஒருவரை அவரை தூக்கிக் கொண்டு, பவுண்டரி எல்லையில் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தார்.
இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் பேர்ஸ்டோவின் இந்த செயல் சமுகவளைதளங்களில் பரவி வருகிறது.
அண்மையில் இங்கிலாந்து அரசு புதைவடிவ எரிபொருட்களை எடுக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து Just Stop Oil அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |