கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் இன்றையதினம்(09.08.2023) மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மேலும், கிழக்கு மாகாணத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி கடல் மற்றும் கடலோர காற்றாலை மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் மேம்பாட்டிற்காக தரை மவுண்ட் சோலார் ஆகியவற்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Energy sector development plans for the Eastern province was discussed with Governor Senthil Thondaman. Govt plans to utilize the natural resources of the Eastern Province to develop offshore & onshore wind power, ground mount solar for renewable energy integration & green… pic.twitter.com/GFN5CbVtsR
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 9, 2023




