யாழ். போதனா வைத்தியசாலை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்
மூளையில் ஏற்படுகின்ற இரத்தக் கசிவுகளுக்கு என்டோவஸ்குலர் அனூரிசம் கொய்லிங் என்ற நவீன சிசிச்சை முறை இதுவரை காலமும் இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையை அடுத்து அரச வைத்தியசாலை என்ற வகையில் இரண்டாவதாக யாழ். போதனா வைத்தியசாலையில் இந்த நவீன சிகிச்சைமுறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியான விடயமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ். போதனா வைத்தியசாலையின் இடையீட்டு கதிரியக்கவியல் மருத்துவ நிபுணர்கள் (Interventional Radiologists), உணர்வழியியல் சிகிச்சை நிபுணர்கள் (Anaesthesiologist) மற்றும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் (Neurosurgeon), வைத்தியர்கள், தாதியர்கள், கதிரியக்கவியலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முதலான வைத்திய குழுவினர் இணைந்து இந்த நுட்பமான நவீன சிகிச்சையை எமது வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொண்டமை வைத்தியசாலை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருத்துவக் குழுவினர் மிகக் குறைந்த வளங்களுடன் இந்த நவீன சிகிச்சையை மேற்கொண்டமை பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.





போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
